dinamalar telegram
Advertisement

சாட்டை துரைமுருகனுக்கு ஜாமின் மறுப்பு

Share
நாகர்கோவில்: முதல்வர் பற்றி அவதுாறு பேசி கைதாகி சிறையில் உள்ள சாட்டை துரைமுருகனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் அக்.10ல் தக்கலையில் நாம்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சீமான் முன்னிலையில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரள முதல்வரையும், தமிழக முதல்வரையும் ஒப்பிட்டு தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று மீண்டும் பத்மனாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். சாட்டை துரைமுருகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை நிராகரித்த மாஜிஸ்திரேட் தீனதயாளன் மேலும் 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement