dinamalar telegram
Advertisement

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 6வது முறையாக 136 அடியை கடந்தது பெரியாறு அணை

கூடலுார்:உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 6 வது முறையாக பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று மாலை 6:00 மணிக்கு 136 அடியை கடந்தது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியாறு அணை பலமிழந்துள்ளதாக கேரளா கூறிய புகாரைத் தொடர்ந்து 1979 ல் இருந்து 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின் அணை ரூ. பல கோடி மதிப்பீட்டில் தமிழக பொதுப்பணித் துறையினரால் பலப்படுத்தப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அணை பலமாக உள்ளது என குழுவின் அறிக்கையை தொடர்ந்து 2014 ல் அணையின் நீர் மட்டம் 142 அடியாக நிலைநிறுத்தவும், பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின் 2014, 2015, 2018, 2019, 2020 ஆகிய ஐந்து ஆண்டுகளில் நீர்மட்டம் 136 அடியை கடந்து தீர்ப்பை உறுதி செய்தது.


கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையால் நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 136 அடியை எட்டியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3550 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு குடிநீர் சாகுபடிக்காக நீர் திறப்பு 2150 கனஅடியாகவும் இருந்தது. நீர்மட்டம் 136 அடியை கடந்து உள்ளதால் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், தாசில்தார்கள் உள்ளிட்டோருக்கு தமிழக பொதுப்பணித் துறையினர் முதல் தகவல் அறிக்கை கொடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement