dinamalar telegram
Advertisement

குளச்சல் கடலில் விசைப்படகு - கப்பல் மோதல்

Share
நாகர்கோவி:குளச்சல் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது பனாமா நாட்டு கப்பல் மோதியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.


குமரி மாவட்டம் குளச்சல் அருகே கொட்டில்பாட்டை சேர்ந்த ராஜமணிக்கு சொந்தமான படகில் குளச்சல், குறும்பனை, மேலமணக்குடியை சேர்ந்த 17 மீனவர்கள் அக்.22ல் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். குளச்சல் துறைமுகத்தில் இருந்து 19 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நேவியாஸ் வீனஸ் என்ற சரக்கு கப்பல் படகு மீது மோதியதில் படகின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.

இதில் மேலமணக்குடியை சேர்ந்த அருள்ராஜ் 29, குளச்சலை சேர்ந்த ஜான்32, இருவரும் படுகாயம் அடைந்தனர். கடலோர காவல் படையினர் இருவரையும் மீட்டு கொச்சி துறைமுகம் கொண்டு சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.


மீதமுள்ள 15 பேரும் கரை திரும்பினர். இவர்கள் லேசான காயங்களுடன் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனாமா நாட்டு கப்பலை கடலோர காவல் படையினர் சிறை பிடித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    குளச்சலில் இருந்து கொச்சி அருகிலா? சிஜு என்பது தமிழ் பெயரா? என்னவெல்லாம் விளையாட்டு காட்டுறான?

Advertisement