dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடி படம் வைக்காத தடுப்பூசி வாகனம் சிறைபிடிப்பு: தி.மு.க.- பா.ஜ., வாக்குவாதம்

Share
நாகர்கோவில்:மோடி படம் வைக்காத தடுப்பூசி வாகனங்களை பா.ஜ.,வினர் சிறை பிடித்ததனர்.

100 கோடி தடுப்பூசி வெற்றியை கொண்டாட நாகர்கோவில் பா.ஜ.,வினர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரிக்கு சென்ற போது அங்குள்ள போர்டுகளில் கருணாநிதி , முதல்வர் ஸ்டாலின் படம் மட்டும் இருந்தது, மோடி படம் அதில் சேர்க்க வேண்டும் என்று கூறி பா.ஜ.,வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
மாவட்டத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமிற்காக நாகர்கோவில் மாநகராட்சியில் ஆட்டோக்கள் மூலம் சந்துகளில் உள்ள வீடுகளிலும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆட்டோக்களில் கட்டப்பட்ட பேனர்களில் கருணாநிதி, ஸ்டாலின் படம் மட்டுமே இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.,வினர் சில இடங்களில் ஆட்டோக்களை மறித்தனர். இவர்களிடம் தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர்.ஆட்டோக்களில் கட்டப்பட்டிருந்த பேனர்களை பா.ஜ.,வினர் அகற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement