dinamalar telegram
Advertisement

ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு குமரியில் மீண்டும் மழை

Share
நாகர்கோவில்:இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது.


குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி முதல் மூன்று நாட்கள் இடைவிடாது பெய்த கனமழையால் மேற்கு பகுதியில் பல கிராமங்கள் தண்ணிரில் தத்தளித்தது.ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது. 17-ம் தேதி இரவு முதல் மழை ஓய்ந்தது. கடந்த மூன்று நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பின்னர் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது.


தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.நாகர்கோவில் -- திருவனந்தபுரம் ரயில் பாதையில் தெங்கன்குழி அருகே நேற்று லேசான மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த தடத்தில் ரயில்கள் அனைத்தும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement