dinamalar telegram
Advertisement

இன்ஸ்பெக்டரை இடம் மாற்ற கோரி கரூரில் பா.ஜ.,வினர் சாலை மறியல்

Share
கரூர்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொது மக்களுக்கு கடலை மிட்டாய் வழங்க சென்றதை தடுத்த இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி, பா.ஜ., நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கோவில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், கோவில்களை திறக்க கோரிக்கை வைத்த, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்தும், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி தலைமையில், அக்கட்சியினர் நேற்று காலை, 11:00 மணிக்கு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு கடலை மிட்டாய் வழங்கினர். அப்போது, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், பட்டாசு வெடிக்க விடாமலும், பொதுமக்களுக்கு கடலை மிட்டாய் வழங்குவதை தடுத்ததாகவும் கூறி, பா.ஜ., வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பா.ஜ., தலைவர் சிவசாமி கூறியதாவது: இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் கடந்த மாதம், விநாயகர் சிலைகளை உடைத்தார். தற்போது கோவில்களை திறக்க உத்தரவிட்டதால், முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடிக்க விடவில்லை. மக்களுக்கும் இனிப்பு வழங்க விடாமல் தடுத்து, இந்து விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அவரை உடனடியாக இட மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால், மாநில தலைவர் அண்ணாமலை அனுமதி பெற்று விரைவில், எஸ்.பி., அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். டவுன் டி.எஸ்.பி., தேவராஜ், எஸ்.ஐ., கஸ்தூரி உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement