dinamalar telegram
Advertisement

10 பவுன் தாலிக்கொடி பறிப்பு

Share
மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஆரியூர் அடுத்த சிங்கயகவுண்டபுதூரை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் தங்கராஜ். இவரது மனைவி கிருஷ்ணவேணி, 39. கடந்த, 13 இரவில் இருவரும் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு கிருஷ்ணவேணி எழுந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த, 10 பவுன் தாலிக்கொடி மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, மோகனூர் போலீசில் புகார் செய்தனர். அதில், 'வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் புகுந்து, தன் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை திருடி சென்று விட்டனர்' என, தெரிவித்திருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement