dinamalar telegram
Advertisement

ரூ.1.71 லட்சம் புகையிலை பறிமுதல்: மொபட்டில் கடத்திய 2 பேர் கைது

Share
மேச்சேரி: மொபட்டில் கடத்திய, 1.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். சேலம் எஸ்.பி., தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, மேச்சேரி, அமரம் திட்டு பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'ஆக்டிவா' மொபட்டை நிறுத்தி சோதனை செய்தபோது, புகையிலை பாக்கெட்டுகளை கடத்திச்செல்வது தெரிந்தது. அதன் மதிப்பு, 1.71 லட்சம் ரூபாய். அந்த பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்த, மேச்சேரி, கோல்காரனூரை சேர்ந்த மணிகண்டன், 24, கார்த்தி, 21, ஆகியோரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement