dinamalar telegram
Advertisement

உயர்நீதிமன்ற கிளை உத்தரவு; பெயர் நீக்கம்: ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு

Share
சேலம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவால், ரவுடி பட்டியலில் இருந்து, பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது.
தமிழக போலீஸ் ஸ்டேஷன்களில் ரவுடி பட்டியல், சந்தேக ரவுடி பட்டியல் என, இரு வகையில் பராமரித்து கண்காணிக்கப்படுகிறது. கடந்த மாதம், தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்களால், ரவுடிகள் மீது போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, 5,000க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் குற்றச்செயலில் ஈடுபடுவோரை விட்டுவிட்டு, திருந்தி வாழ்வோரை கைது செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த, 2020 மார்ச்சில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர்களின் நன்னடத்தைபடி, அவர்களது பெயரை, பட்டியலில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், அப்பெயர்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அதில், ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் மீது, 10 ஆண்டுகளில் வழக்குப்பதிவு செய்திருக்க கூடாது; சொந்த ஊரில் வசிப்பவராகவும், குற்றச்செயலில் ஈடுபடாமலும், அதில் ஈடுபடுவோருக்கு உதவுபவராகவும் இருக்கக்கூடாது எனும் நிபந்தனைகளுடன் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அப்படி, சேலம் மாநகரில் நீக்கம் செய்வோரின் பட்டியலில், 220 பேர் இடம்பெற்றுள்ளனர். தமிழகம் முழுதும், 2,220 பேர் பெயர், பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர்கள் குறித்து ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு, உளவுப்பிரிவு, கியூ பிரிவு ஆகியவை மறு விசாரணை செய்து அளிக்கும் அறிக்கைப்படி, தகுதி உள்ளவர் நீக்கப்படுவர் என, அதிகாரிகள் கூறினர். போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'ரவுடி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் பட்டியல் தயாரிக்கவில்லை. சந்தேக ரவுடி பட்டியலில் இருந்து மட்டும், உயர்நீதிமன்ற கிளை பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிக்குட்பட்டு நீக்கப்பட்டியல் தயாராகிறது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement