dinamalar telegram
Advertisement

கூட்டுறவில் முதலீடுக்கு வட்டி உயர்வு: சேலம் மண்டலத்தில் அமலுக்கு வருமா?

Share
சேலம்: கூட்டுறவில் முதலீடுக்கு வட்டி உயர்வு, சேலம் மண்டலத்தில் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், கடந்த செப்., 30ல் பிறப்பித்துள்ள உத்தரவு: கூட்டுறவு நிறுவனங்களில், மக்கள் முதலீடு செய்யும் தொகைக்குரிய வட்டி, 6ல் இருந்து, 7 சதவீதமாகவும், மூத்த குடிமகன்களுக்கு, 6.5ல் இருந்து, 7.5 சதவீதம், கூட்டுறவு நிறுவனங்களில் ஓய்வு பெற்ற பணியாளருக்கு, 8 சதவீத வட்டி வழங்க வேண்டும். அதேபோல், நகைக்கடன் வட்டி, 9.5 சதவீதத்தில் இருந்து, 11.25 - 12 சதவீதமாகவும், மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, கூட்டுறவு நிறுவனங்கள் பெறும், காசு கடனுக்குரிய வட்டி, 9.5ல் இருந்து, 10.5 சதவீதம் வழங்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண், ஊரக வளர்ச்சி வங்கிகள், வைப்புத்தொகை பெறும் சங்கங்கள், நகைக்கடன் வழங்கும் சங்கங்களில், அக்., 1 முதல், புது வட்டி விகிதம் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தலைமை வங்கி மேலாண் இயக்குனர், ஊரக வளர்ச்சி வங்கி மேலாண் இயக்குனர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவை, இதர மண்டலங்களில் செயல்படுத்திய நிலையில், சேலம் மண்டலத்தில் அமல்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் கூறுகையில், ''வெகு விரைவில் புது வட்டி விகிதம் அமலுக்கு வரும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement