dinamalar telegram
Advertisement

ராணுவ கேன்டீனில் தென்னிந்திய தளபதி ஆய்வு

Share
சேலம்: சேலத்தில், முன்னாள் படைவீரர் பங்களிப்பு மருத்துவமனை, அரியானூரில் முன்னாள் படை வீரர் கேன்டீன் ஆகியவற்றில், தென்னிந்திய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா, அடுத்தடுத்து ஆய்வு செய்தார். இரு நாளுக்கு முன் நடந்த ஆய்வில், பங்களிப்பு மருத்துவமனை, கேன்டீன், நேர்த்தியாக செயல்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். மேலும், குறைகள் களைய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கோவை தலைமையகத்தின் கர்ணல் ஆனந்தன், பங்களிப்பு ஆரோக்கிய திட்ட அதிகாரி கர்ணல் குணசேகரன், வேலூர் மாவட்ட ராணுவ தலைமை கேன்டீன் செயல் இயக்குனர் கர்ணல் கங்காதரன், சேலம் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் பிரபாகர், கேன்டீன் உதவி இயக்குனர் ஹானரரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement