dinamalar telegram
Advertisement

வனப்பகுதி கோவிலுக்கு வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு போராட்டம்

Share
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனச்சரகம் சிக்கரசம்பாளையத்தை அடுத்த பீக்கிரிபாளையம் வனப்பகுதியில், கோம்பை மாதேஸ்வரர் கோவில், பெருமாள் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இன்று ஐந்தாவது சனிக்கிழமை பூஜை நடைபெற உள்ளதால், வாகனங்களில் கோவிலுக்கு சென்று வர, வனத்துறையினரிடம் நேற்று அனுமதி கேட்டனர். டிராக்டர், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. நடந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில், பீக்கிரிபாளையம் வன எல்லையில், ??க்கும் மேற்பட்ட மக்கள், வனத்துறையினரிடம் அனுமதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (நேற்று) இரவே கோவிலுக்கு செல்லலாம். கோவிலில் தங்கி பூஜை, அன்னதானம் செய்து கொள்ளுங்கள். அதேசமயம் வாகனங்களுக்கு அனுமதி தரப்படாது என்று, அதிகாரிகள் கூறினர். இதையேற்ற மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement