dinamalar telegram
Advertisement

ஒன்றிய சேர்மன் பதவிக்கு போட்டி; அ.தி.மு.க., வசமான பா.ம.க.,-சுயே.,: வானூர் ஒன்றியத்தில் பரபரப்பு

Share
வானுார் : வானுார் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் மெஜாரிட்டி இல்லாததால் சேர்மன் பதவியைப் பிடிக்க அ.தி.மு.க., - தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் 2 பா.ம.க., ஒரு சுயேட்சை அ.தி.மு.க., வசம் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் ஒன்றிய உள்ளாட்சித் தேர்தலில் மூன்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.,வினர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 27 ஒன்றிய கவுன்சிலர் பதவியில், தி.மு.க., 10, வி.சி., 2, அ.தி.மு.க., 11, பா.ம.க., 2, சுயேச்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.சேர்மன் பதவியைப் பிடிக்க 14 இடங்கள் தேவைப்படுகிறது.

அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அவர்களுடைய ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. எப்படியும் சேர்மன் பதவியைப் பிடித்து விட வேண்டும் என அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மறைமுகமாக காய் நகர்த்தி வருகின்றன.இதற்கிடையே சேர்மன் பதவிக்கு வரும் 22ம் தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது.

அதுவரை தனது வசம் உள்ள அ.தி.மு.க.,வினரை, தி.மு.க.,வினர் இழுக்காத வகையில், தேர்வு செய்யப்பட்டுள்ள 11 அ.தி.மு.க.,வினரும் மலைப்பிரதேசங்களுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., வினருடன் குதிரை பேரம் முடிந்ததால், ஒரு சுயேச்சை, 2 பா.ம.க.,வினரும் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையறிந்த தி.மு.க.,வினர் அடுத்தகட்ட முயற்சியில் காய் நகர்த்த துவங்கியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement