dinamalar telegram
Advertisement

தொல்லியல் சின்னங்களில் மூவர்ண ஒளி பிரகாசம்

Share
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்பங்கள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களில், தேசியக்கொடியின் மூவர்ண விளக்குகள் ஒளிர்ந்து பிரகாசித்தன.நாட்டின், 75வது சுதந்திர தினம் மற்றும் நுாறு கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் நினைவாக, மத்திய கலாசார துறை நாடு முழுதும், 100 பாரம்பரிய சின்னங்களில், தேசிய கொடியின் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களில், பிரகாச விளக்குகளை ஒளிரவைத்து, தேசியகீத இசையையும் ஒலிக்க வைக்க உத்தரவிட்டது.தமிழகத்தில், மாமல்ல புரம், ஐந்து ரதங்கள் சிற்பங்கள், காஞ்சிபுரம் கைலாசநாதர், கங்கைகொண்டசோழபுரம் சோழீஸ்வரர், வேலுார் ஜலகண்டேஸ்வரர், புதுச்சேரி மூலநாதசுவாமி ஆகிய கோவில்கள், செஞ்சிகோட்டை ஆகியவற்றில், நேற்றுமுன்தினம் துவங்கி, இன்று வரை, மாலை 6:00 முதல் இரவு 1:00 மணி வரை, மூவர்ண பிரகாச விளக்குகள் ஒளிர வைக்கப்படுகிறது. தேசியகீத இசை ஒலிக்கப்படுகிறது. விளக்க பதாகையும் வைக்கப்பட்டுஉள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement