dinamalar telegram
Advertisement

குப்பையில் வீசப்பட்ட குழந்தை மீட்பு

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், குப்பையில் குழந்தையை வீசிச்சென்ற தாய் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் குப்பை கொட்டும் இடத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு, பெண் ஒருவர் கையில் இருந்த பையை போட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில், பையில் அசைவு தெரிவது கண்டு மக்கள் அங்கு கூடினர்.பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை, பைக்குள் இருந்தது; 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைக்கு முதலுதவி செய்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையை வீசிச்சென்ற பெண் குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், '21 வயது திருமணமாகாத பெண், தவறான உறவால் கர்ப்பமாகியுள்ளார். வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். எவ்வித மருத்துவ உதவியும் இன்றி, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்தது, குழந்தையை குப்பையில் வீசியது ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட குடும்பத்தினர், கர்ப்பத்துக்கு காரணமான நபர் குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement