dinamalar telegram
Advertisement

அவிநாசி அருகே விபத்து மருத்துவ மாணவர் பலி

Share
அவிநாசி:அவிநாசி அருகே நடந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர் பலியானார்.கேரள மாநிலம், பாலக்காடு, கடம்பழிபுரத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், 63. இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன் இர்ஷத் அகமது 25. மருத்துவ படிப்பு இறுதியாண்டு மாணவர்.நேற்று கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலக்காட்டுக்கு, டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலுாரில் ஆறு வழி சாலையில் இர்ஷத் அகமது ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் ஓரம் இழுத்து சென்று தடுப்பில் மோதியது. அதில், இரும்பு கம்பி தலை மோதி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவிநாசி போலீசார் கூறுகையில், 'இர்ஷத் அகமத், அதிக வேகத்தில் பைக்கில் சென்றதால், விபத்து ஏற்பட்டது. ஹெல்மெட் அணியவில்லை' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement