dinamalar telegram
Advertisement

மரபுசாரா திட்டத்தில் 5,000 மெ.வா., மின்சாரம்! தமிழக அரசு ஒத்துழைக்க வலியுறுத்தல்

Share
கோவை:'தமிழக அரசு உதவினால் ஐந்து மாதங்களில் மரபுசாரா எரிசக்தி மூலம், 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்' என, சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தித்துறையினர் தெரிவிக்கின்றனர்.நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. மரபுசாரா எரிசக்தி துறையில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழகத்தில், அரசு மின்சார கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை, புதிதாக அமல்படுத்தினால் உலகளவில் பல முதலீட்டாளர்கள் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருவர்.தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா கூறியதாவது:தமிழகத்தில் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி திட்டத்தில், 3,000 மெகாவாட், காற்றாலை மின் உற்பத்தி துறையில், 9,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், 2018ம் ஆண்டுக்கு பின், தமிழக அரசு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தத்தை புதிதாக அமல்படுத்தவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் சோலார் பிரிவில், 500 மெகாவாட், காற்றாலை பிரிவில், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கே கட்டமைப்பு வசதிகள் அதிகரித்துள்ளன.மரபுசாரா எரிசக்தி துறை மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு புதிதாக அறிவிக்க வேண்டும். தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். இதனால் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்ய உலக அளவில் பலர் ஆர்வம் கட்டுவர். ஐந்து மாதங்களில் தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தி பிரிவின் கீழ், 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement