dinamalar telegram
Advertisement

ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

Share
மதுரை : மதுரையில் இலக்கிய மன்றம், அருணாச்சலா கல்வி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

அறக்கட்டளை தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மன்றம் புரவலர் பெனிட்கரன், தலைவர் பெர்னாட்ஷா, கவுரவ தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். நிறுவனர் மாடசாமி வரவேற்றார். உயர்நீதிமன்றம் நீதிபதி புகேழந்தி ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சசித்ரா உள்ளிட்ட 21 பேர் பாராட்டப்பட்டனர்.

புலவர் சோமன், முனைவர்கள் அழகர்நாதன், சுரேந்தர், கார்த்திகேயன், அரிஷர் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜா, மங்கையர்க்கரசி கல்வி குழும இயக்குனர் சக்தி பிரனேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement