dinamalar telegram
Advertisement

காணை பி.டி.ஓ., அலுவலகம் முன் 2 பேர் தற்கொலை முயற்சி

Share
விழுப்புரம் : காணை பி.டி.ஓ., அலுவலகத்தில் 2 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காணை ஒன்றியம், கோனுார் ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சோமசுந்தரம் மனைவி வனஜா மற்றும் முருகதாஸ் மனைவி அமுதா ஆகியோர் போட்டியிட்டனர்.ஓட்டு எண்ணிக்கையின்போது, இருவரும் சமமாக 57 ஓட்டுகள் பெற்றனர். இதையடுத்து, குலுக்கல் முறையில் தேர்விற்கு அழைத்தபோது, அமுதா தரப்பினர் வரவில்லை. பின், குலுக்கலில் வனஜா வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அமுதா தரப்பினரும், வனஜா தரப்பினரும் நேற்று மாலை 6:00 மணிக்கு காணை பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது, அமுதா தரப்பினர் தங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வனஜா திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இதையடுத்து, எதிர் தரப்பைச் சேர்ந்த முருகதாஸ் தம்பி ரவீந்திரன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உடன், காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வனஜா, ரவீந்திரனை மீட்டு விசாரித்தனர். அப்போது, வனஜாவின் வெற்றி சட்ட விதிகளின்படி அறிவிக்கப்பட்டதாகக் கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement