dinamalar telegram
Advertisement

மரத்தில் வேன் மோதி விபத்து; காய்கறி வியாபாரி பலி

Share
அவலுார்பேட்டை : வளத்தி அருகே மரத்தில் வேன் மோதியதில் காய்கறி வியாபாரி இறந்தார்.

வளத்தி அடுத்த மாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 42; இவர், நேற்று காலை வியாபாரம் தொடர்பாக சேத்பட் நோக்கி மினி வேனில் சென்றார். வேவைன அதே ஊரை சேர்ந்தச் அருண்குமார், 25; ஓட்டிச் சென்றார்.

செஞ்சி சேத்பட் மெயின் ரோடில் அருள்நாடு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர மரத்தில் மோதியது.இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த டிரைவர் அருண்குமார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement