dinamalar telegram
Advertisement

பராமரிப்பில்லாத அரசு பஸ்கள்: அதிருப்தியில் பயணிகள்

Share
ஊட்டி;மலை மாவட்ட போக்கு வரத்து கழகத்தில், பல பகுதிகளுக்கு பழுதுடன் இயக்கப்படும் பஸ்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் அரசு போக்குவரத்து கிளைகள் மூலம், 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், பிற மாவட்டம்; மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூரில் இயக்கப்படும் பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. அன்றாடம் இயக்கப்படும் பஸ்களில் பயன்படுத்தப்படும், 'பிரேக் லைனர், டிரம், ஸ்பிரிங் கட், இன்ஜின் ஆயில், ஸ்பேர் டயர்,' உள்ளிட்டவைகளில் பராமரிப்பு குறைப்பாடு அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில்,'பஸ்களில் உள்ள குறைபாடுகள் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பதிவேட்டில் எழுதி தெரிவித்தாலும், மாத கணக்கில் சரி செய்வதில்லை; அதிகாரிகளின் நிர்பந்தத்தால், வேறு வழியின்றி டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை இயக்கி வருகிறோம். இதனால், நடுவழியில் பழுதாகும் பஸ்கள் பல மணி நேரத்திற்கு பின்தான் பழுது நீக்கப்பட்டு இயக்கப்படுவதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.பொதுமேலாளர் கணபதி கூறுகையில்,''மலை மாவட்ட போக்குவரத்து கழகத்தில் உள்ள குறைப்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகாரிகள் உத்தரவு கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement