dinamalar telegram
Advertisement

ஒன்பது நாட்கள் கொலு: நவராத்திரி விழா நிறைவு

Share
குன்னுார்:குன்னுார், ஓட்டுப்பட்டறையில் மத நல்லிணக்கத்துடன் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.குன்னுாரில் உள்ள, கோவில்கள், வீடுகளில் கடந்த, 9 நாட்களாக நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிலையில், குன்னுார் ஓட்டுப்பட்டறை விநாயகர் கோவில், வெலிங்டன் வழிபாட்டு மன்றத்தில் நவராத்திரி கொலு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.'ஓட்டுப்பட்டறையில், மகாலட்சுமி என்பவரின் வீட்டில், 11 படிக்கெட்டுகளில், 'தசாவதாரம், அஷ்டலட்சுமி, மாரி, சரஸ்வதி, மகாலட்சுமி, கிருஷ்ணர் மற்றும் பிற சிலைகள்,' என, 200க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், அரிசி, உப்பு, கோதுமை, நவதானியங்கள், வீணை வைத்து, பூஜைகள் நடத்தப்பட்டது. பிரசாத வினியோகம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement