dinamalar telegram
Advertisement

பள்ளிகளில் பெற்றோருக்கு கூட்டம்: வரும் 21, 22ல் நடத்த அறிவுறுத்தல்

Share
உடுமலை:மாவட்டத்திலுள்ள பள்ளிகளில், வரும், 21 மற்றும் 22ம் தேதி, பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வகுப்புகள் துவக்க தமிழக அரசு அறிவித்துள்ளது..இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்பது, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பின் பள்ளிகள் கடந்த செப்., மாதம் முதல் இயங்குகிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் செயல்களை ஆராயும் வகையில், பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.கல்வி அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு, வரும் 21ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு, வரும் 22ம் தேதியும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சமக்ரா சிக்ஷா மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பள்ளிகளை ஆய்வு செய்வது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement