dinamalar telegram
Advertisement

மனைவி தற்கொலை: கணவர் கைது

Share
சின்னமனுார் : மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.

சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் 34, கோவையில் வேலைசெய்த போது, திருச்சி லால்குடி அருகில் கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்துலட்சுமி 32யை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் மேட்டூரில் ஆயத்த ஆடையகத்தில் பணியாற்றினர். கடந்தாண்டு மார்க்கையன்கோட்டைக்கு மனைவியுடன் வந்து குடும்பம் நடத்தினார்.

கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக மனம் உடைந்து முத்துலட்சுமி நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனுார் இன்ஸ்பெக்டர் சேகர், எஸ்.ஐ. கதிரேசன் விசாரணையில் கணவர் பிரபாகனை கைது செய்தனர். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement