dinamalar telegram
Advertisement

பி.ஏ.பி., பாலாறு படுகைக்கு தண்ணீர் தருவதில்... ஓரவஞ்சனை!சிறப்பான திட்டத்தில் குளறுபடியால் ஆவேசம்

Share
உடுமலை;பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும், திருமூர்த்தி பாலாறு படுகை விவசாயிகளுக்கும், ஆழியாறு படுகை விவசாயிகளுக்கும் அரசு விதிகளின் அடிப்படையில் பாரபட்சமின்றி, சம அளவில் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்பட்டு, பாலாறு படுகையிலுள்ள, 3 லட்சத்து, 77 ஆயிரத்து, 162 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.அதே போல், ஆழியாறு படுகையில், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, திட்ட தொகுப்பு அணைகளின் நீர் இருப்பு மற்றும் வரத்தை அடிப்படையாகக்கொண்டு, ஆறு மாதத்திற்கு மண்டல பாசன காலமாக கொண்டு பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.நீர் பங்கீட்டில் சிக்கல்திட்டத்தில், பாலாறு மற்றும் ஆழியாறு புதிய பாசனம் ஆகியவற்றுக்கு, திட்ட தொகுப்பு அணைகளே நீர் ஆதாரமாக உள்ள நிலையில், இரு படுகை விவசாயிகளுக்கும் ஒரே அளவீட்டில் நீர் வழங்க வேண்டும், என அரசு உத்தரவுகள் உள்ளன.'ஆனால், நீர்ப்பங்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதால், திருமூர்த்தி அணையிலிருந்து நீர் வழங்கப்படும் பாலாறு படுகை பாதிக்கிறது; பாசன பகுதிகளில் முழுமையாக எந்த விதமாக பயிர்களும் சாகுபடி செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே, ஓரவஞ்சனை இல்லாமல், இரு படுகை விவசாயிகளுக்கும் நீர் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, பி.ஏ.பி., திருமூர்த்தி நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், பாலாறு மற்றும் ஆழியாறு பாசன விவசாயிகளுக்கு, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து தான் நீர் வழங்கப்படுகிறது. இரு பகுதி விவசாயிகளுக்கும் ஒரே அளவீட்டில் நீர் வழங்க அரசு விதி உள்ளது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் பாசன பகுதியுள்ள, பாலாறு படுகை விவசாயிகளுக்கு குறைவாக தண்ணீர் வழங்கப்படுகிறது.

இது குறித்து பல முறை அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் கண்டு கொள்வதில்லை.வறட்சி அதிகரிக்கும்! தற்போது, பி.ஏ.பி., பாலாறு படுகையில், 4ம் மண்டல பாசனத்திலுள்ள, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கவும், ஆழியாறு படுகையிலுள்ள, 22 ஆயிரத்து, 332 ஏக்கர் நிலங்களுக்கு, 2,573 மில்லியன் கன அடி நீரும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் வாயிலாக, முழுமையாக மழை மறைவு மற்றும் வறட்சி பகுதியிலுள்ள பாலாறு படுகை விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.ஆழியாறு பாசனத்திற்கு வழங்கும் நீரின் அளவே, திருமூர்த்தி அணை பாலாறு படுகை விவசாயிகளுக்கும் வழங்கினால், கூடுதலாக, 1,400 மில்லியன் கன அடி நீர் வழங்க வேண்டும்.நியாயமா வழங்குங்கஆழியாறு பாசன விவசாயிகளுக்கு கூடுதலாக ஏன் நீர் வழங்கப்படுகிறது என கேட்கவில்லை. இரண்டு பாசன பகுதிகளுக்கும், பரம்பிக்குளம் அணையிலிருந்துதான் நீர் வருகிறது.
இரண்டு ஆயக்கட்டு நிலங்களுக்கும் சம அளவில் பங்கீடு வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவுபடி, பாலாறு படுகை விவசாயிகளுக்கும் கூடுதலாக நீர் வழங்க வேண்டும்.எனவே, திருமூர்த்தி அணை பாலாறு படுகையிலுள்ள, 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு கூடுதலாக, 1,400 மில்லியன் கன அடி நீர் வழங்கவும், அடுத்து துவங்க உள்ள முதல் மண்டல பாசனத்திற்கு, 11 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
தரிசாகும் அபாயம்
பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்தில், ஒரு மண்டலத்துக்கு இரண்டு ஆண்டு இடைவெளியில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதிலும், தண்ணீர் திறப்பு, வினியோகம் உட்பட குளறுபடிகளால், மக்காச்சோளம் சாகுபடிக்கும் கூட பற்றாக்குறையாகவே தண்ணீர் கிடைக்கிறது. சில மண்டல பாசனத்தின் போது, பாசன நீரை பாய்ச்சாமல், நிலத்தை தரிசாகவே விடும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, பல ஆயிரம் ஏக்கர் பாசன ஆதார திட்ட குளறுபடிகளை உடனடியாக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement