dinamalar telegram
Advertisement

வடுகபட்டி கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைப்பு

Share
பெரியகுளம் : வடுகபட்டி பைபாஸ் அருகே சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணாகிறது.

வடுகபட்டி பேரூராட்சி 15 வார்டுகளுக்கு, சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்துதினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சோத்துப்பாறையிலிருந்து, வடுகபட்டிக்கு செல்லும் குழாய் பைபாஸ் ரோட்டோரம், மர்மநபர்களால் உடைக்கப்பட்டது.

இவர்கள் இங்கு மதுபார் போல் பயன்படுத்துகின்றனர். மதுவில் தண்ணீர் கலப்பதற்கு சட்டவிரோதமாக குழாயை உடைத்துள்ளனர். இதனால் வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. குடிநீர் வடிகால் வாரியம், உடைப்பை சீரமைத்து குழாய் உடைத்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement