dinamalar telegram
Advertisement

மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்பு

Share
ஆண்டுதோறும், அக்., 15ல், உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலை அரசு மருத்துவமனையில், நேற்று,உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.இதையடுத்து, டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட அனைவரும், 'தினமும் சோப்பு போட்டு கைகழுவுவோம். இதற்கான பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்போம். பிறருக்கு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்,' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதேபோல், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு, சோப்பு போட்டு கைகழுவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தவிர, துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.சாலையில் படிந்து நிற்கும் மணல்உடுமலை நகரில், கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக, உயர்வான பகுதியில், சாலை ஓரம் இருக்கும் மண், மழை நீரில், தாழ்வான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த மண், நகரின் பிரதான சாலையான, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, பழநி ரோட்டில் படிந்து காணப்படுகிறது.மழையின் தாக்கம் குறைந்து, வெயிலில் காயத் துவங்கியதும், மண்ணின் ஈரப்பதம் காய்ந்து, புழுதியாக பறக்கிறது.
வாகன ஓட்டிகள் கூறுகையில், ' சாலையில் புழுதி பறப்பதை நிரந்தரமாக தடுக்க சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். கால்வாயின் உயரத்திற்கும் மேடாக சாலையை அமைத்தும், கால்வாய்க்கு வெளிப்புறம் இருக்கும் மண் மழையில் அடித்து வராத வகையில், குறுக்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், சாலையில் மண் படிவதையும், புழுதி பறப்பதையும் நிரந்தரமாக தடுக்க முடியும்,' என்றனர்.
உணவில் அஜினோமோட்டோ சேர்ப்பு
சமையலில், 'அஜினோமோட்டோ'வை, ஒரு சுவையூட்டியாகச் சேர்க்கின்றனர். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் 'சூப்', பிரியாணி, துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் அனைத்து உணவுகளிலும், இது சேர்க்கப்படுகிறது.ஆனால், இத்தகைய உணவை உட்கொள்வதால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வகையில், உடுமலை நகரில் உள்ள சில உணவகங்கள், துரித உணவுக்கடைகளில், அஜினோமோட்டோ பயன்பாடு அதிகரித்துள்ளது.
உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'அஜினோமோட்டோ எனும் உப்பைப் பயன்படுத்தக் கூடாது என, உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. நகரில் உள்ள சில உணவகங்களில், அஜினோமோட்டோவை சேர்த்து உணவு தயாரிப்பதாக புகார் எழுகிறது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா உடுமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நுண்கலை மன்றம் சார்பில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா, இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு, முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். பேராசிரியர் மதியழகன், முன்னிலை வகிக்க, மாணவி சத்யா, வரவேற்றார்.
உதவிப் பேராசிரியர் அபுபக்கர், அப்துல்கலாமின் வாழ்வியல் முறை, அறிவியல் முன்னேற்றத்திற்கான பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை நுண்கலை ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வன், சைராபானு மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.அம்மனுக்கு திருவிளக்கு பூஜைவால்பாறை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பிரம்மகுமாரி கற்பகம் துவக்கி வைத்து பேசியதாவது:இறைவன் ஜோதி வடிவானவர். நவராத்திரி பண்டிகை தசரா எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நாளில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, சிவசக்தியின் அருளாசி கிடைக்கும். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம் செய்வது அவசியம்.தியானத்தின் வாயிலாக மட்டுமே இறைவனை காணமுடியும். மனஅமைதியுடனும், பொறுமையுடனும் இறைவனை உள்ளன்போடு வழிபட்டால், நீங்கள் கேட்டது கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.பெண்கள், குழந்தைகள், பூஜையில் பங்கேற்றனர்.
வளர்ச்சி பணி: அடிக்கல் நாட்டு விழா
பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட கப்பளாங்கரையில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பு, ஆண்டிபாளையத்தில், 16 லட்சம் மதிப்பீட்டில் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் இப்பணிகளுக்கான அடிக்கலை நாட்டி, சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.தவிர கோப்பனுார் பகுதி கே.வி.கே.நகரில், 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட, ரேஷன் கடையையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி, துணை தலைவர் துரை, மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, நெகமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.மலைத்தொடரில் மழைப்பொழிவு குறைவுவால்பாறையில் இந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை இந்தாண்டில் மட்டும் நான்கு முறை நிரம்பியது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வால்பாறையில் சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. மழைப்பொழிவு குறைந்து வருவதால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.நேற்றுமுன்தினம், 160.30 அடியாக இருந்த சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.97 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு, 607 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து வினாடிக்கு, 829 கன அடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. அதிகப்பட்சமாக மேல்நீராறில், 17 மி.மீ., மழை பெய்துள்ளது.கோவிலில் திருவோண பூஜைநெகமம், காட்டம்பட்டிபுதுாரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதுநாள் வரை, கோவில் நடை சாத்திய நிலையில், நேற்று கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் மூர்த்திகளுக்கு, காலை, 10:00 மணி முதல், பகல்,12:30 மணி வரை திருமஞ்சன பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கரிவரதராஜபெருமாளை திரிசித்து, பிரசாதம் பெற்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement