dinamalar telegram
Advertisement

கோயில்களில் வித்யாரம்பம்

Share
ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் விஜயதசமி அன்று ஏடு துவங்கும் நிகழ்ச்சியான வித்தியாரம்பம் நடந்தது.

திரளாக குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்றனர். அப்போது தட்டில் பரப்பி வைத்திருந்த அரிசியில் குழந்தைகள் விரல் பிடித்து ஓம் என எழுத ஏடு துவங்கும் நிகழ்ச்சி நடந்தது.ராஜபாளையம் சொக்கர் கோயில் ,கோதண்ட ராமசுவாமி கோயிலில் காலை 7:00 மணி முதல் கல்வி கடவுளான சரஸ்வதி தேவி முன் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றனர்.சத்திரப்பட்டி சேவாபாரதி சார்பில் வேதாந்த மடாலயத்தில் குழந்தைகள் நாவில் தேன் தடவி தட்டில் பரப்பி வைத்திருந்த அரிசியில் குழந்தைகள் விரல் பிடித்து ஓம் என எழுதினர்.ஸ்ரீவில்லிபுத்துார்: மகாத்மா வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழா பள்ளி தாளாளர் முருகேசன் தலைமையில் நடந்தது.

சரஸ்வதி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முதன்முதலாக பள்ளிக்கு அடி எடுத்து வைக்கும் குழந்தைகளை முதல்வர் ராணி வரவேற்று எழுத்துக்களில் முதல் எழுத்தாக வரும் அகரத்தை பூஜை செய்யப்பட்ட நெல்மணியில் குழந்தைகளின் கைகளால் எழுத வைத்தார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement