dinamalar telegram
Advertisement

தீபாவளி பண்டிகை முன்பணம் பெற விண்ணப்பிக்கலாம்

Share
சேலம்:சேலம் கோட்ட போக்குவரத்து தொழிலாளர் தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் பெற நாளைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தீபாவளி பண்டிகைக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற விரும்பும் நிரந்தர பணியாளர் அதற்கென வழங்கப்பட்டுள்ள விருப்புரிமை படிவ பட்டியலில் கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் பிரிவு அலுவலரிடம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பட்டியலை அக்.20க்குள் சேலம், தர்மபுரி மண்டல தலைமையக பணியாளர் பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.நடப்பாண்டில் புதிதாக முன்பணம் பெற விரும்பும் பணியாளர்களின் பெயரை விருப்புரிமை பட்டியலில் சேர்த்து அனுப்ப வேண்டும். அக்.17ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும் விருப்புரிமை படிவங்கள் தனி விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement