dinamalar telegram
Advertisement

இளம்மழலையர் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Share
மதுரை:'விதிமுறைகளில் சில தளர்வுகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்,' என மதுரையில் தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதன் மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் கூறியதாவது: கடந்தாண்டு மார்ச் முதல் கொரோனா காரணமாக தமிழகத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட இளம்மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் எவ்வித வருவாயுமின்றி கட்டட வாடகை, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க பள்ளி நிர்வாகிகள் கஷ்டங்களுக்கு ஆளாகினர்.பழைய நிலைக்கு பள்ளி நிர்வாகங்கள் வர விதிமுறைகளில் சில தளர்வுகளை அரசு வழங்க வேண்டும். பள்ளிகளின் அங்கீகாரம் பெறுவதற்கு அவகாசம் வழங்க வேண்டும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement