dinamalar telegram
Advertisement

தேசிய ஒற்றுமை தினம்: தமிழக போலீஸ் கன்னியாகுமரி - குஜராத் பைக் ஊர்வலம்

Share
நாகர்கோவில்:தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு பைக் ஊர்வலம் புறப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி 25 போலீசார் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு சிறப்பு காவல்படை கூடுதல் இயக்குநர் அபய்குமார் சிங், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சித்ரதுர்கா, ஹூப்ளி, கொல்ஹாபூர், பூனே, சூரத் மற்றும் நர்மதா ஆகிய மாவட்டங்கள் வழியாக 2085 கி.மீ பயணம் மேற்கொண்டு வரும் 24-ம் தேதி சர்தார் வல்லபாய் படேல் சிலையினை சென்றடைகின்றனர். பிரதமர் மோடி தலைமையில் 31-ம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement