dinamalar telegram
Advertisement

வேடபாளையம் கோவில் சம்ப்ரோக் ஷணம் 

Share
உத்திரமேரூர்-உத்திரமேரூர், வேடபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று, சம்ப்ரோக் ஷணம் நடந்தது.சம்ப்ரோக் ஷணத்தையொட்டி, யாக சாலை பூஜை நேற்று முன்தினம் மாலை துவங்கியது. சம்ப்ரோக் ஷண தினமான நேற்று காலை, 7:10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோக் ஷணம் நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து மஹா தீபாராதனை நடந்தது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், வேடபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று, இரவு 7:00 மணிக்கு வெங்கடேச பெருமாள் சுவாமி வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ராஜேஸ்வரி நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement