dinamalar telegram
Advertisement

போலி ஜவுளி விற்பனை தந்தை, மகன் கைது

Share
திருநெல்வேலி:ராம்ராஜ், ஆலயா, உதயம் என 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை போலியாக தயாரித்து, ஆடைகளில் ஒட்டி விற்பனை செய்த ஜவுளிக்கடை உரிமையாளர், மகன் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் மகராஜன் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்துபவர் ராஜேந்திரன், 60. இவர், ஈரோடு, திருப்பூரில் மலிவாக வேட்டி, சட்டை, உள்ளாடைகளை வாங்கி வந்து, 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை போலியாக தயாரித்து ஒட்டி விற்பனை செய்தார்.

செல்வகுமார் என்பவர், போலி ஸ்டிக்கர்களை தயாரித்து தந்தார். திருநெல்வேலி ஜங்ஷன், 'சி பிரின்ட்' நிறுவனத்தில் போலி ஸ்டிக்கர்களை பிரின்ட் செய்துள்ளனர்.இது குறித்து, ராம்ராஜ் நிறுவன மேலாளர் பாபு புகார்படி, ஆலங்குளம் போலீசார், ராஜேந்திரன், அவரது மகன்கள் திலகராஜ், ஜெயப்பிரகாஷ், தமிழரசன், மற்றும் போலி ஸ்டிக்கர் தயாரித்து தந்த செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.ராஜேந்திரன், தமிழரசன் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். ஆடைகள், ஸ்டிக்கர் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், ஸ்கேனர், கம்ப்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement