dinamalar telegram
Advertisement

18 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

Share
காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 தாசில்தார், 24 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறை அலகில் பணியாற்றும் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள், நிர்வாக காரணங்களால் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 தாசில்தார்கள் பல்வேறு பணியிடங்களில் மாற்றம் செய்து, கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார். அதேபோல், துணை தாசில்தார்கள், 24 பேர் பல்வேறு பணியிடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக, உத்திரமேரூர் ரெகுலர் தாசில்தாராக தாண்டவமூர்த்தியும், வாலாஜாபாத் ரெகுலர் தாசில்தாராக லோகநாதன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள், இப்போது மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதாக புலம்புகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement