dinamalar telegram
Advertisement

ஓட்டு வங்கி பகுதியில் தோல்வியை தழுவியது பா.ம.க.,

Share
திருக்கழுக்குன்றம்-திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதியில், பா.ம.க.,வினர், இரண்டு மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டும், அனைவரும் தோல்வியை தழுவினர்.திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதியில், இரண்டு மாவட்ட கவுன்சிலர், 26 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்கள் உள்ளன.இப்பகுதியில், பா.ம.க., ஓட்டு வங்கி பலம் குறிப்பிடத்தக்கது. இக்கட்சியினர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக, 1996 - 2001, 2001 - 06 ஆண்டுகளில் என, இரண்டு முறை பதவி வகித்துள்ளனர்.இக்கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைத்து, இறுதியாக, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.கடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க.,விற்கு, இக்கூட்டணியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தலில், கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தனித்தே போட்டியிட்டது.திருக்கழுக்குன்றம் ஒன்றியக் குழு தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இப்பதவியை கைப்பற்ற தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளும் தீவிரமாகின.இவ்விரு கட்சிகளும், பெரும்பான்மை பெறாவிட்டால், தலைவர் பதவி ஓட்டுக்கு, பா.ம.க., தயவையே நாடும் என கருதி, பா.ம.க., 16 வார்டுகளில் போட்டியிட்டது. தேர்தல் முடிவோ, இக்கட்சிக்கு எதிராக அமைந்தது.தி.மு.க., 16 வார்டுகளில் வென்று, பெரும்பான்மை பெற்றது. அ.தி.மு.க., ஏழு, வி.சி., ஒன்று, சுயேச்சைகள் இரண்டு வார்டுகள் என வென்று, பா.ம.க., அனைத்து வார்டுகளிலும் தோல்வியை தழுவியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement