dinamalar telegram
Advertisement

வெளிநாடு படிக்க சென்ற மகனை ஆஜர்படுத்த வழக்கு

Share
மதுரை:மருத்துவப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸ் சென்று மாயமான மகனை ஆஜர்படுத்த கோரி, தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:என் மகன் விக்னேஷ்வரன், 26. மருத்துவப் படிப்பிற்காக 2016ல் பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு 2018ல் மாயமானார். மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். மகனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு விசாரித்தது.மத்திய அரசுத் தரப்பு: பிலிப்பைன்ஸ் டாவோ சிட்டியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுாரியில், விக்னேஷ்வரன் சேர்ந்தார்.பின், படிப்பை கைவிட்டு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்து, மிண்டனாவோவில் வசிக்கிறார்.அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மணிலாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்தது. தொடர்பு கொள்ள மற்றும் கண்டுபிடிக்க, மனுதாரருக்கு அனைத்து உதவிகளையும் துாதரகம் வழங்கும்.

நீதிபதிகள் உத்தரவு: பிலிப்பைன்ஸ், மிண்டனாவோவில் மனுதாரர் மகன், மனைவியுடன் வசிக்கிறார். அவர் யாராலும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படவில்லை. ஆதலால், இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை.மகனை சந்திக்க, பிலிப்பைன்ஸ் செல்ல மனுதாரர் விரும்புகிறார். அங்கு செல்லும் பட்சத்தில் மகனை சந்திக்க, மனுதாரருக்கு இந்திய துாதரகம் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement