dinamalar telegram
Advertisement

அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு கோவிலில் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

Share
மகிழ்ச்சி

தினமும், வீரராகவர் கோவிலுக்கு சென்று வழிபடுவேன். கொரோனா தொற்று காரணமாக, வார இறுதி நாட்களில், பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்டதால் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிலையில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியும், மன நிம்மதியும் அளிக்கிறது.ஏ.சத்யா, 28, கொப்பூர், திருவள்ளூர்.

மன நிறைவு

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மேலும் தளர்த்தி, வாரத்தின் அனைத்து நாட்களிலும், கோவில்கள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது, நல்ல முடிவு. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விஜயதசமி நாளில், செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்தது மன நிறைவு அளிக்கிறது. எஸ்.மன்னார், 50, செங்கல்பட்டு.

வரவேற்பு

கொரோனா ஊரடங்கில், தமிழக அரசு தளர்வு ஏற்படுத்தி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், கோவில்களில் அர்ச்சனை செய்ய மறுக்கப்படுகிறது. திருமண நாள், பிறந்தநாள், நேர்த்திக்கடன், பரிகாரம் என கோவிலுக்கு சென்றால், கோவிலில் அர்ச்சனை செய்ய மறுக்கப்படுகிறது. எனவே, அர்ச்சனை செய்து வழிபடவும் அரசு அனுமதி வழங்க வேண்டும்.எம்.பிரவீன்குமார், 41காஞ்சிபுரம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    மலருக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் தருகின்ற கோவில் கோபுரங்களின் போட்டோக்கள் தத்ரூபமாக இருக்கிறது. மிகவும் சிறப்பு. தயவு செய்து அந்த கோபுரம் எந்த கோவிலுக்கு உரியது எந்த நகரம் என்று கேப்சன்ஸ் தரலாமே. போட்டோக்ராபருக்கு மிக்க வந்தனம் அண்ணாந்து பார்க்கும் கூட கோபுரங்களை அருகில் கொண்டு வந்து அளித்தற்கு. இறையருள் உங்களுக்கு கிடைப்பதாகுக. உங்களுக்கும் ஒரு விண்ணப்பம். கோபுரங்களை பார்க்கும் பொழுதெல்லாம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லி வணங்குவது எண்களின் வழக்கம். அப்படி பார்க்கின்ற கோபுரங்களை அருகில் கொணர்ந்து காட்டும் பொது முழு கோபுர உச்சியும் பிரேமிள் வரும்படி தரவும். குறிப்பாக கோபுர கலசங்கம் அனைத்தும் தெரியவேண்டும். ஒற்றை கலசம் முதல் பதினோரு பண்ணிஇரெண்டு கலசங்கள் வரை இருந்தாலும் அதை எண்ணி பார்த்து மகிழ்வதும் அந்த கலசத்திற்குரிய எண்ணிக்கையில் கோபுர அடுக்குகளும் வாயில்களும் இருப்பதை பார்த்து கட்டிட கலைகளையும் அதன் சிறப்பு என்ன என்பதையும் பார்ப்பது வழக்கம். நீங்கள் உங்களின் சிறப்பு அரிவாள் போட்டோ மூலம் பேசுகிறீர்கள், அதை என்போன்ற பலர் அறிகிறோம். தொடர்ந்து சிறப்பாக செய்வீர்கள் அனைவருக்கும் ஆயுத பூசை விஜயதசமி வாழ்த்துக்கள். அனைத்து வளமும் பெற்று அன்போடு குடும்பத்தினருடன் அளவளாவி இன்புணரு வாழ அன்னை தேவி பராசக்தி உங்களுக்கு நிச்சயம் அருள் புரிவாள்

  • சம்பத் குமார் -

    1). கோவில்களை திறப்பதற்கு போராட்டங்கள் நடத்திய திரு அண்ணாமலை Ex IPS, பிஜேபி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 2). கோவில் திறப்பதற்கான போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தமிழக சகோதர மற்றும் சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.3). தமிழ் மக்கள் மற்றும் தருமத்திற்கு கிடைத்த வெற்றி.5). ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.6). தருமே உலகின் முதன்மையானது மற்றும் எக்காலத்திலும் நிலைத்து நிற்ககூடியது. .இறைவன் தருமத்தின் வடிவில் எங்கும் வியாபித்து நிற்கிறார்.7). தமிழக அரசாங்கம் தமிழக மக்கள் மற்றும் தருமத்தின் பக்கம் நிற்க வேண்டும். இல்லையெனில் காலம் தமிழக அரசாங்கத்திற்கு தன் சுயவிருப்பங்களை காட்டும்.8). தமிழக மக்கள் எல்லா இடங்களிலும் மாஸ்க், இடைவெளி மற்றும் போதிய கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.9). வாழ்க பாரதம், வாழ்க தழிழகம், வெல்க தேசியம். Jai Hind. ஹரி ஓம்.

Advertisement