dinamalar telegram
Advertisement

பாலாற்றில் வெள்ளம் ட்ரோன் கண்காணிப்பு

Share
திருப்பத்துார்:கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், கிருஷ்ணராஜசாகர் அணை, பேத்தமங்கலம் ஏரி நிரம்பி, உபரி நீர் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், ஆந்திர மாநிலத்தில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வினாடிக்கு, 2,000 கன அடி தண்ணீர் தமிழகத்தின் வேலுார் மாவட்டத்துக்கு வருகிறது.நேற்று காலை பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம், காட்பாடி, சத்துவாச்சாரி வழியாக ராணிப்பேட்டை நோக்கி, பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர குடியிருப்பு பகுதிகளை, 'ட்ரோன் கேமரா' வாயிலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement