dinamalar telegram
Advertisement

விவசாயிகள் தின விழா

Share
திருவூர்-திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பெண் விவசாயிகள் தின விழாவை முன்னிட்டு பயிற்சி முகாம் நடந்தது.திருவள்ளூர் அடுத்த, திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மகிளா கிஷான் திவாஸ் என்னும் பெண் விவசாயிகள் தினத்தை பயிற்சி முகாம் நேற்று, திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமையில் நடந்தது.பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் நிலையம் வாயிலாக ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், காளான், தேனீ வளர்ப்பு, நடவு, அறுவடை ஆகிய பெண்கள் எளிதாக பணிபுரியும் வகையில் காணொலி காட்சி மூலம் விளக்கி கூறப்பட்டது.நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி செந்தில்குமார், புனிதா ஆகியோர் பெண்களுக்கு சேமிப்பதின் அவசியம், ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் தோட்டக்கலையின் வாய்ப்புகள் குறித்து பேசினார்.விஞ்ஞானி சிவகாமி, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மண்புழு வளர்ப்பு, புறக்கடை கோழி வளர்ப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் 40 பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement