dinamalar telegram
Advertisement

ஊறுகாயுடன் கொள்ளையன் எஸ்கேப்

Share
பொதட்டூர்பேட்டை--வீடு புகுந்து வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தவர்கள், வீட்டிலிருந்த ஊறுகாயை, மொத்தமாக அள்ளி சென்றுள்ளனர்.பொதட்டூர்பேட்டை அடுத்த, பேட்டை கண்டிகையை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு, கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். பீரோவில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு உட்பட ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தவர்கள், சமையலறைக்குள் நுழைந்துள்ளனர்.அங்கு, ஜாடியில் இருந்த ஊறுகாயை, பிளாஸ்டிக் கவரில் அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பியுள்ளனர். ஜாடியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement