dinamalar telegram
Advertisement

முதல்வர் கண்காணிக்க வேண்டும்: பன்னீர்செல்வம்

Share
சென்னை-'கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலைகள், விதிகளை சரியாக பின்பற்றுகிறதா என்பதை முதல்வர் கண்காணித்து, மக்கள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்க வேண்டும்; என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை மீறி, பல தொழிற்சாலைகள் செயல்படுவதன் காரணமாக, அப்பகுதிகளிலுள்ள காற்று நீர் மற்றும் நிலம் மாசுபடுகிறது.உற்பத்தியின் போது வெளியேறும் புகையால் காற்று அசுத்தமாகிறது. மாசின் தரம் குறைந்து, அப்பகுதி மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை காற்று மண்டலத்தை தாக்காமலிருக்க, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தொழிற்சாலைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கின்றவா என்பது கண்காணிக்க வேண்டும். விதியை மீறும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, முதல்வர் இப்பிரச்னையில் உடனே தலையிட்டு, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விதிகளை சரியான பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.அப்பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். விதிகளை மீறிச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement