dinamalar telegram
Advertisement

காலிபிளவர் பக்கோடாவில் பேன்டேஜ் சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.5,200 அபராதம்

Share
திருநின்றவூர்--திருநின்றவூரில், பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட காலிபிளவர் பக்கோடாவில் 'பேன்டேஜ்' இருந்த விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஆவடி அடுத்த திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில், ஆலிஸ் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இந்த சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு, காலிபிளவர் பக்கோடா வாங்கியுள்ளார்.அதை வீட்டில் வைத்து அவர் சாப்பிட முயன்ற போது, அதில் 'பேன்டேஜ்' இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர், சூப்பர் மார்க்கெட்டில் கேட்ட போது, முறையான பதில் கிடைக்கவில்லை.இது குறித்து அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று அந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தி, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement