dinamalar telegram
Advertisement

தொல்லியல் சின்ன வளாகத்தில் தானியங்கி வானிலை கருவி

Share
மாமல்லபுரம்-மாமல்லபுரத்தில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டுகளின் பல்லவர் கால தொல்லியல் சின்னங்கள் அமைந்து, உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக புகழ் பெற்றுள்ளன. இவற்றை, மத்திய தொல்லியல் துறை பராமரிக்கிறது. தொல்லியல் பகுதியான இவ்வூரின் வானிலை தகவல் அறிய, கடற்கரை கோவில் வளாகத்தில் சாதாரண கருவி அமைக்கப்பட்டது. இக்கருவி நாளடைவில் செயல்படாமல் வீணானது.எனவே, புதிதாக 'ஆட்டோமேடிக் வெதர் ஸ்டேஷன்' எனப்படும் தானியங்கி வானிலை ஆய்வு கருவி, கோவில் வளாகத்தில் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.தினசரி வெப்பநிலை, மழை பொழிவு, காற்றின் வேகம், திசை, ஈரப்பதம் உள்ளிட்ட விபரங்கள் இக்கருவியில் தாமாக பதிவாகும்.தொல்லியல் துறை தலைமையகம், இணையதள தொடர்பு மூலம், இப்பகுதி வானிலை தகவல்களை நேரடியாக அறிய இயலும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement