dinamalar telegram
Advertisement

மிளகாய் நாற்று வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

முதுகுளத்துார் அருகே காக்கூர்,கருமல்,தேரிருவேலி,மட்டியரேந்தல் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் நிலத்தின் ஓரங்களில் மிளகாய் நாற்று வளர்த்து வருகின்றனர். கால்நடைகள் சேதபடுத்தாமல் இருப்பதற்காக சேலை,முள்வேலி அமைத்து பாதுகாக்கப்படுகிறது. மிளகாய் நாற்று போதுமானஅளவு வளர்ந்த உடன் நிலங்களில் நட்டு வைக்கப்படும்.இந்தாண்டு பருவமழை பெய்யும் நம்பிக்கையில் நெல்,மிளகாய் விவசாயம் செய்துள்ளோம் என்று விசாயிகள் கூறுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement