dinamalar telegram
Advertisement

கரிக்கட்டையில் ஓவியங்கள் தீட்டி இளைஞர்களை போதையில் இருந்து மீட்கும் ராமநாதபுரம் வாலிபர்

Share
ராமநாதபுரம் : கரிக்கட்டையில் தலைவர்கள், சமூக நீதி போராளிகளின் படங்களை வரைந்து இளைஞர்களை போதை பழக்கத்தில் இருந்து வெளிவர செய்கிறார்

ராமநாதபுரம் இளைஞர் ஒருவர்.ராமநாதபுரம் நகராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதி இந்திரா நகர். இங்கு 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக மாவட்ட நிர்வாகம் எட்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.40 லட்சத்தில் சமுதாய திருமண மண்டபம் கட்ட நிதி ஒதுக்கி அதற்கான கட்டுமானப்பணிகளும் நடந்தன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் 2016 இறுதியில் நிறுத்தப்பட்டது.

இந்த சமுதாய திருமண மண்டப கட்டடம் அருகில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுவதால் குடிமகன்கள் இரவு பகலாக திருமண மண்டபத்தை மது அருந்தும் பார் ஆக மாற்றிவிட்டனர். அடிக்கடி இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டது. இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் இப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. சிலர் கட்டடத்தை பொது கழிப்பிடமாகவும் பயன்படுத்த துவங்கினர்.சமுதாய திருமண மண்டபத்தை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். அல்லது கட்டடத்திற்கு பாதுகாப்பு அளித்து வெளி நபர்கள் உள்ளே செல்வதை தடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தும் இதுநாள் வரை எந்த பலனும் இல்லை.போதை ஆசாமிகள் இந்த கட்டடத்தின் சுவர்களில் ஆபாச வாசகங்கள் எழுதுவது, ஆபாசமான படங்களை வரைந்து வந்தனர். இதனை மாற்றும் முயற்சியில் இப்பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன்அப்துல் மாலிக் 28, களத்தில் இறங்கினார். போதை ஆசாமிகளுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தவும், கட்டடத்திற்குள் வருவதை தடுக்கவும் திட்டமிட்டார்.இதற்காக கரிக்கட்டை மற்றும் பென்சில் பயன்படுத்தி தேசிய தலைவர்கள், சமூக நீதி போராளிகள், சுவாமி படங்களை ஓவியமாக வரைந்து வருகிறார்.

இவர் வரைந்துள்ள ஓவியங்கள் அனைத்தும் 3 டி வடிவத்தில் தத்ரூபமாக உள்ளன.இதுபோன்ற சுவாமி படங்கள், தலைவர்கள் ஓவியங்கள் உள்ள இடங்களில் அமர்ந்து மது அருந்த மாட்டார்கள், போதை பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள் . அவர்களுக்கு நிச்சயம் மனமாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கடந்த ஓராண்டாக மண்டபத்தின் சுவர்களில் இதுபோல் வரைந்து வருகிறார்.புத்தர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், அம்பேத்கர், பாரதியார்,கார்ல்மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் ஓவியங்கள், தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட ஓவியங்கள் வரைந்துள்ளார். சிவன் உள்ளிட்ட சுவாமி படங்கள், டைனோசர், கிடா சண்டை என பல ஓவிங்களை வரைந்துள்ளார்.

இவைமட்டுமின்றி மதுவிற்கு அடிமையாகி இந்த கட்டடத்திற்குள் வரும் இளைஞர்களின் படங்களையும் வரைந்துள்ளார். இதன் மூலம் பல இளைஞர்களிடையே மதுப்பழக்கத்தில் இருந்து மாறும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement