dinamalar telegram
Advertisement

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Share
கரூர்: காந்தி கிராமம் பகுதியில் சுத்தம் செய்யப்படாத சாக்கடை வாய்க்காலால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. கரூர் காந்திகிராமம் பகுதி யில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தெருக்களில் சாக்கடை கால்வாய் செல்கிறது. பல சாக்கடை கால்வாய்கள், நீண்ட காலமாக தூர் வாரப்படாமல் உள்ளன. இதனால், கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க, கால்வாயை தூர்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டியது அவசியம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement