dinamalar telegram
Advertisement

முதியவர் சடலம் கிணற்றில் மீட்பு

Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளிபாளையம் அடுத்த ஒட்டமெத்தையைச் சேர்ந்த கந்தசாமி, 76, திடீரென மாயமானார். இது குறித்து அவரது மகன் கடந்த, 2ல், பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஆண்டிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் வந்தது. தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். விசாரணையில் கந்தசாமி என தெரிந்தது. பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement