dinamalar telegram
Advertisement

பஸ் மீது டூவீலர் மோதியதில் பெயின்டர்கள் இருவர் சாவு

Share
ஓசூர்: மேலுமலை அருகே, டவுன் பஸ் மீது பைக் மோதியதில், பெயின்டர்கள் இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பந்தரகுட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 40; அதே பகுதியை சேர்ந்தவர்கள் முனி கிருஷ்ணன், 25, கோவிந்தசாமி, 48; மூவரும் பெயின்டர்கள். மூவரும் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மேலுமலை அருகே நேற்று காலை, 9:30 மணிக்கு சென்றனர். பைக்கை முனிகிருஷ்ணன் ஓட்டினார். முன்னால் சென்ற அரசு டவுன் பஸ் மீது டூவீலர் மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராமகிருஷ்ணன், முனிகிருஷ்ணன் அடுத்தடுத்து இறந்தனர். கோவிந்தசாமி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement