dinamalar telegram
Advertisement

அணையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Share
கிருஷ்ணகிரி: அணையில் எந்த நேரத்திலும், நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்யும் தொடர் மழையால், ஓசூர், கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 828 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 947 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று, 1,529 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 50.40 அடிக்கு நீர் இருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement