dinamalar telegram
Advertisement

சிறப்பாக பணியாற்றிய 93 போலீசாருக்கு பாராட்டு

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய, 93 போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு வழக்கு மற்றும் காவல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அதன்படி, கிருஷ்ணகிரி டவுன், சூளகிரி மற்றும் கெலமங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களை தூய்மையாக வைத்தமைக்கு, 40 போலீசாருக்கும், குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது, குட்கா பொருட்கள் கடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மற்றும், 10 வழக்குகளில் நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த, 10 நீதிமன்ற காவலர்கள் உட்பட, 93 பேருக்கு பாராட்டு சான்றிதழை எஸ்.பி., வழங்கினார். நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தன், ராஜூ, ஓசூர் ஏ.எஸ்.பி., அரவிந்த், டி.எஸ்.பி.,க்கள் கிருத்திகா, அலெக்ஸ்சாண்டர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா, இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தனிப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் கண்ணன், சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement